ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 32 பேர் பாதிப்பு

மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு கொரோனா வார்டுகளை தயார் செய்ய உத்தவிட்டுள்ளது.
Covid-19
Published on

ஆந்திரா மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் கடும் காய்ச்சல், சளி, இருமல் தொற்று பாதிப்புக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தனர். சிகிச்சைக்கு வந்தவர்களின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் அவர்களுக்கு ஓமிக்கிரான் ஆர்.எப் 5 வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.

மக்கள் அச்சம்

இதேபோல் சிகிச்சைக்கு வந்த 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு கொரோனா வார்டுகளை தயார் செய்ய வேண்டும். முக கவசம், சானிடைசர் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டது. கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் இறந்தனர்.

கொரோனா பாதிப்பு உயர்வு

இந்த நிலையில் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ முந்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com