தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்கிறார் ரேவந்த் ரெட்டி

டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.
தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்கிறார் ரேவந்த் ரெட்டி
Published on

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

நேற்று ஐதராபாத் தனியார் ஓட்டலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல் அமைச்சரை அறிவிப்பார்.

இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறார். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வரும் 7ம் தேதி பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. மேலும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. இதனால் ஒரு முதல் முதலமைச்சர், 2 துணை முதலமைச்சர்கள் நியமிக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com