கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி விடுவிப்பு!

மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி சென்றார்.
பிரியங்கா காந்தி
Published on

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி 'லோக் கல்யாண் மார்க்' பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, ​​டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சத்ராசல் மைதானத்தில் இருந்து ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி சென்றார்.

கங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு:

காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால் மற்றும் பவன் கேரா ஆகியோர் லோக் கல்யாண் மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (NDA) இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவியிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவும் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்றார்.

எக்ஸ் தள பதிவு:

நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்ப தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர்கள், 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்திய 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகே போராட்டம் நடத்தினர்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, "அரசு எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை; அதேவேளையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவும் விரும்பவில்லை. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்," என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com