

2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என்றும், 104 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ள தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றிப் பெற்றுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ராதாபுரம் தேர்தல் வழக்கில் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கின் வரம்புகளை மட்டுமே ஆய்வு செய்ய சொன்ன நிலையில் அதைமீறி தீர்ப்பு என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.