புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறையை சேர்த்து அனுப்பிய பப் நிர்வாகம்

புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை மற்றும் ORS கரைசலை பப் நிர்வாகம் அனுப்பியுள்ளது. பப் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார்.
புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறையை சேர்த்து அனுப்பிய பப் நிர்வாகம்
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் உள்ள பப் ஒன்றில் இருந்து புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை சேர்த்து அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை மற்றும் ORS கரைசலை பப் நிர்வாகம் அனுப்பியுள்ளது.

இதனை அடுத்து, பப் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமாரிடம் மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அக்ஷய் ஜெயின், "நாங்கள் பப்கள் மற்றும் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இருப்பினும், இளைஞர்களை கவரும் இத்தகைய மார்க்கெட்டிங் உத்தி புனே நகரத்தின் மரபுகளுக்கு எதிரானது. பப் நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com