

எண்ணெய் வளம் மிக்க குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86வது வயதில் காலமானார்.
கடந்த நவம்பர் மாதம் ஷேக் நவாஃப் உடல் நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானார்.
குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் துரதிர்ஷ்டவசமான மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். குவைத் அரச குடும்பத்தினருக்கும், தலைமைக்கும், மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.