குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறந்தநாள்: கனிமொழி, அண்ணாமலை வாழ்த்து

இந்திய தேசத்தை வழிநடத்துவதில் தொடர்ச்சியான வலிமையை பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
President
Published on

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி மற்றும் We The Leaders இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில்,

இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும், இன்னும் பல ஆண்டுகள் நாட்டிற்குப் பொதுச் சேவையாற்றவும் வாழ்த்துகிறேன் என்றார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட, ஆரோக்கியமான வாழ்வையும், நமது மாபெரும் தேசத்தை வழிநடத்துவதில் தொடர்ச்சியான வலிமையையும் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com