இலவசங்கள் நல்லதல்ல எனக்கூறிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலவசங்கள் நல்லதல்ல எனக்கூறிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 நிதி உதவி. கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும்.

எல்.பி.ஜி. பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும்.

பின்தங்கிய பகுதிகளில் ரூ.5-க்கு சத்தான உணவு வழங்க அடல் கேன்டீன்கள் அமைக்கப்படும்.

60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ஓய்வூதியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக அவர் பிரதமர் மோடியின் ஒப்புதலைப் பெற்றாரா?

இலவசங்களை வழங்கியதற்காக பிரதமர் மோடி 100-க்கும் மேற்பட்ட முறை என்னை விமர்சித்துள்ளார். இப்போது பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் என்னைப் போலவே இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இலவசங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என தான் கூறியது தவறு என பிரதமர் மோடி இப்போது கூறவேண்டும். இலவசங்கள் நாட்டு மக்களுக்கு நன்மையைத் தரும் என்பதை பிரதமர் மோடி இப்போதாவது ஏற்கவேண்டும் என காட்டமாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com