வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

அரியானாவில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது.காங்கிரஸ் அங்கு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்
Published on

புதுடெல்லி:

அரியானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.

காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் பா.ஜ.க.வுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரியானாவில் பாஜக வெற்றிபெற வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை வழங்கிய அரியானா மக்களுக்கு எனது வணக்கம். இது அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி அரசியலுக்குக் கிடைத்த வெற்றி ஆகும். இங்குள்ள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com