ஆபரேஷன் சிந்தூர்: குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்தித்து விளக்கம்

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.இந்திய ராணுவத்தின் தாக்குதலால் அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர்: குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்தித்து விளக்கம்
Published on

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

அப்போது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com