கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவசம்: ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு

ஒடிசாவில் பா.ஜ.க. தலைமையிலான அரசு பதவியேற்று 2 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
mohan charan majhi
Published on

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பா.ஜ.க. 78 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. இதன்மூலம் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால பிஜு ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஒடிசா முதல் மந்திரியாக மோகன் சரண் மாஹி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் ஒடிசாவின் முதல் பா.ஜ.க. முதல்மந்திரி என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. கே.வி.சிங் தியோ, பிரபதி பரிடா ஆகியோர் துணை முதல் மந்திரிகளாக பதவியேற்றனர்.

இதற்கிடையே, பாஜக தலைமையிலான ஒடிசா அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரி மோகன் சரண் மாஹி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பா.ஜ.க. அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கை மாநிலத்தின் அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் பயனளிக்கும்.

கல்வியை உண்மையாகவே இலவசமாகவும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையிலும், எனது அரசு மழலையர் வகுப்பு முதல் முதுகலை வரை கல்வி முற்றிலும் இலவசம் என அறிவிக்கிறது.

கல்வித் துறையில் இத்தகைய நடவடிக்கை, நாடு முழுவதிலும் முதல்முறையாக ஒடிசாவில் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com