கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது, இரவு நேரத்தில் போனில் அழைக்கக் கூடாது: வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்

கடன் வசூல் முகவர்கள் கடன் வாங்கியவர்களை மிரட்டவோ, அவமதிக்கவோ, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ கூடாது.
RBI
ஆர்.பி.ஐ.
Published on

கடன் வசூல் நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. கடன் வசூல் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், மனிதநேயத்துடனும் நடைபெற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இரவு நேரங்களில் போனில் அழைக்கக் கூடாது

புதிய விதிகளின்படி, கடன் வசூல் முகவர்கள் கடன் வாங்கியவர்களை மிரட்டவோ, அவமதிக்கவோ, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ கூடாது. அதிகாலை அல்லது இரவு நேரங்களில் தொடர்ந்து அழைத்து தொந்தரவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசூல் அழைப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், வசூல் முகவர்கள் தங்களது அடையாளத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும். அவர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கடன் வாங்கியவரின் தனியுரிமையை மதித்து, தொழில்முறை முறையில் மட்டுமே நடந்து கொள்ள வேண்டும் என RBI வலியுறுத்தியுள்ளது. அடமானச் சொத்துகளை கைப்பற்றுவதற்கும் தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமானதாக இருக்க வேண்டும்

இந்த புதிய விதிகள் மூலம் கடன் வாங்கியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் நடைமுறைகளும் ஒழுங்குபடுத்தப்படும் என்று RBI தெரிவித்துள்ளது. இதனால் கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமான, வெளிப்படையான மற்றும் மரியாதையான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com