பல இரவுகள் தூக்கமின்றி தவித்தேன்.. மகன் அபிஜித் தீப்கே வெற்றி குறித்து கண்ணீருடன் தாய் சொன்ன விஷயம்

இதை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ பார்க்கத் தேவையில்லை
பல இரவுகள் தூக்கமின்றி தவித்தேன்.. மகன் அபிஜித் தீப்கே வெற்றி குறித்து கண்ணீருடன் தாய் சொன்ன விஷயம்
Published on

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த செய்தி வெளியானதும், போராட்ட்டதை முன்னின்று நடத்திய மகாராஷ்டிராவை சேர்ந்த சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் தாயார் அனிதா திப்கே கேமராக்களின் முன் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்தினார்.

தாய் பேட்டி

அபிஜீத் திப்கேவின் தாயார் அனிதா தீப்கே கூறுகையில்,

"அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக அவன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியதிலிருந்து நான் பல இரவுகள் தூக்கமின்றித் தவித்தேன்.

முன்பு ஜெய்ப்பூரில் அவன் மீது நடந்த தாக்குதல்களும், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது அவன் மீது மை வீசப்பட்ட சம்பவமும் எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியது.

தினமும் காலையில் போனை பார்க்கவே பயமாக இருக்கும்; அவனது நண்பர்களை அழைத்து அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்று விசாரித்துக் கொண்டே இருப்பேன்.

என் மகன் டெல்லி கொசுக்களுக்கு இடையே இரவுகளை கழித்தான். போராட்டத்தின் போது அவனுக்குத் டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டது.

இருப்பினும் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டான். அவனது உழைப்பிற்கும் மன உறுதிக்கும் கிடைத்த வெற்றி இது. " என்று தெரிவித்தார்.

மேலும் போராட்டத்தின் இனி இனிப்புகள் வழங்கித் தனது மகனை வரவேற்கப்போவதாகவும், இது தனது மகனின் வெற்றி மட்டுமல்ல, போராடிய அத்தனை மாணவர்களின் வெற்றி என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தந்தை பேட்டி

அபிஜீத்தின் தந்தை பகவான்ராவ் தீப்கே பேசுகையில்,

"எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் பின்னணி கிடையாது. அவன் எனது விருப்பத்திற்கு மாறாகவே இதில் இறங்கினான்.

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்ப வேண்டாம் என்றும், கைது செய்யப்படலாம் என்றும் கெஞ்சினோம்.

அவன் மீது இருமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மகன் உயிருடன் இருக்க மாட்டானோ என்று பயந்தோம். கடவுள் புண்ணியத்தில் அவன் பாதுகாப்பாக இருக்கிறான்." என்றார்.

பிரதானுக்கு பாராட்டு

மேலும், "கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து, மாணவர்களைப் படிப்பில் கவனத்தை வைக்குமாறு கேட்டுக்கொண்டது அவரது பெரிய மனதை காட்டுகிறது.

இதை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ பார்க்கத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதானுக்குப் பாராட்டு: என்றும், என்றும் அவர் குறிப்பிட்டதுடன், மகன் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவன் ம் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com