இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவு பெற்றது

நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர்தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவு பெற்றது
Published on

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது.

அயல்நாடுகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். சென்னையில் 36 மையங்களில் 24,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com