+2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.20,000- பஞ்சாப்பில் காங்கிரஸ் வாக்குறுதி

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 8 கேஸ் சிலிண்டர் இலவசம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
கோப்பு புகைப்படம்
கோப்பு புகைப்படம்
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப்பின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி, தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் நிறைய தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதம் 2000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் நவ்ஜோட் சிங் சித்து அறிவித்துள்ளார்.

வாக்குறுதியில் அவர் கூறியுள்ளதாவது:-

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய், ஆண்டிற்கு 8 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். கல்லூரியில் சேரும் பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் பெண்களுக்கு 20,000 ரூபாய், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் பெண்களுக்கு 15,000 ரூபாய், 5-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் பெண்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்படும்.

பெண்களின் பெயரில் சொத்து பரிமாற்றம் இலவசமாக செய்யப்படும். மாநிலம் முழுவதும் பெண்கள் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு நவ்ஜோத் சிங் சித்து கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com