நகைக்கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு...

ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர்.நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு...
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com