

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது.
செல்வதை அள்ளித்தருவதாக நம்பப்படும் இந்த சித்திவிநாயகர் கோவிலின் நன்கொடைப் பணத்தில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை படம் பெருமளவு அறக்கட்டளை ஊழியர்களால் திருடப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மகாராஷ்டிராவிலும் நன்கொடை திருட்டு புகார்கள் வந்துள்ளன.
பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நன்கொடை திருட்டு புகார்கள் எழுந்த நிலையில் இதுதொடர்பான விசாரணையில் கோவிலின் காவலாளி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மும்பையிலுள்ள இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் காணிக்கை வருகிறது. இந்த ஆண்டு ரூ. 182 கோடியும் கடந்த ஆண்டு ரூ. 137 கோடியும் வந்துள்ளது.
சித்திவிநாயகர் கோவில் நன்கொடைத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.18 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா லைவர் ராஜ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டைக் முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவிலின் 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நன்கொடை முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகால கோவில் அறக்கட்டளையின்அனைத்து நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்களை விரிவாகத் தணிக்கை செய்யத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸைச் சந்தித்து, 2023 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தின் நன்கொடை விவரங்களைச் சமர்ப்பித்தனர். இந்த விவரங்களை ஆய்வு செய்த பிறகே, கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து ஆவணங்களையும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.