முன்னாள் காதலன் என்னை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைத்தான் - 'Mrs இந்தியா' அழகி வேதனை

ரினிமா போரா இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இன்று வரை சிலர் இது என் தவறு என்றே சொல்கிறார்கள்.
முன்னாள் காதலன் என்னை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைத்தான் - 'Mrs இந்தியா' அழகி வேதனை
Published on

திருமதி இந்தியா 2024 பட்டம் வென்ற ரினிமா போரா தனது காதலன் தனக்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி ஊட்டியதாகவும், தன்னை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார். பிரபல யூடியூபருக்கு அவர் அளித்த நேர்காணலில் ரினிமா போரா இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

"கடந்த 16 வருடங்களாக நான் துஷ்பிரயோகத்தை அனுபவித்து வருகிறேன். அதை மறக்க எனக்கு பல ஆண்டுகள் ஆகும். அந்த நாட்கள் இப்போது முடிந்துவிட்டன என்று ஒவ்வொரு நாளும் நான் ஆறுதல் கூறிக் கொள்கிறேன். இன்று வரை சிலர் இது என் தவறு என்றே சொல்கிறார்கள். அதற்காக நான் இன்றும் போராடுகிறேன்." என்று அவர் கூறினார்.

"16 வயதில், நான் அசாமில் இருந்து பெங்களூருவுக்கு படிக்க சென்றேன். எனது முதல் உறவு அங்கு ஒரு முஸ்லிம் ஆணுடன் இருந்தது. என் பெற்றோரைப் போலவே, அவர் என் சொந்த நலனுக்காக என்னை துன்புறுத்துவதாக நான் நினைத்தேன். சமயங்களில் அவர் என்னை நடத்திய விதத்திற்காக நான் அவரை தலிபான் என்றும் அழைத்தேன்."

"அவர் என்னை கொடூரமாக அடித்தார். என்னை மாட்டிறைச்சி சாப்பிட வைத்தார். அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி சாப்பிட வைத்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அவரது பெற்றோர் என்னை மாட்டிறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்தினார்கள். என் பெயரை ரினிமா போராவிலிருந்து ஆயிஷா ஹுசைன் என்று மாற்றினார்கள். என்னையும் நமாஸ் செய்ய வைத்தார்கள்," என்று ரினிமா போரா தெரிவித்தார்.

நேர்காணலின் போது, இது ஒரு லவ் ஜிஹாத் சூழ்நிலை என்று அவர் ஒப்புக்கொண்ட ரினிமா, "அவர் இந்த பாட்காஸ்டை பார்த்து கொண்டிருக்க வேண்டும். நான் அவரை விட்டுவிட்டால் என் மீது ஆசிட் வீசுவேன் என்று அவர் மிரட்டினார்," என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com