12 வயது சிறுமிகள் தலையில் தாக்கிய போலீஸ்.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என அபிஜித் தீப்கே வலியுறுத்தல்

எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின.
மோடி
மோடி
Published on

ஜூலை 20 நாடாளுமன்றம் பேரணியில் கலந்துகொண்டதற்காக 12 வயது சிறுமிகள் மீது கூட போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோரியாக வேண்டும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.

மோடி வீடியோ

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், "எனக்கு எதிராகவும், எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின. இருப்பினும், தவறு செய்யும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தண்டனையைத் தேடாமல், அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டவும் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அந்த மாணவர்களை மன்னிக்கிறேன்," எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

தீப்கே வீடியோ

தன்னை இழிவாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக மோடி நேற்று முன்தினம் இரவு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செல்பி வீடியோவை விமர்சித்து நேற்று தீப்கே எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் பேசும் அவர், "நேற்று(நேற்று முன்தினம்) மோடி ஜி வீடியோவில் அவர் சிறுவர்களை மன்னிப்பதாக கூறியிருந்தார் . இன்றிரவு அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு, ஜூலை 20 மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன்.

12 வயது சிறுமிகளின் தலையில் போலீஸ் தாக்கியது. பெண்களின் ஆடைகள் கிழிக்கப்ட்டன. பெண்களின் அந்தரங்க உறுப்புகளையும் போலீசார் தாக்கினர். எனவே மோடி, போலீசாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ராகுல் பதிவு

மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது.

வினாத்தாள் கசிவுகள், தேர்வுகள் ரத்து ஆகியவரை பல வருட கடின உழைப்பை ஒரே இரவில் அழிதந்துவிடுகிறது. நியாயமற்ற ஒரு சிஸ்டத்தை வைத்துக்கொண்டு, நமது மாணவர்கள் நியாயமாக உழைக்க வலியுறுத்தப்படுகின்றனர்.

இதற்கு மத்தியில் நமது பிரதமருக்கு மாணவர்களை மன்னித்துவிடுவதாக நா கூசாமல் சொல்கிறார். தங்கள் பிள்ளையை இழந்த ஒரு பெற்றோரை கூட அவர் இதுநாள்வரை சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் தங்கள் எதிர்காலத்தை பறிகொடுத்த ஒரு மாணவருடன் கூட அமர்ந்து அவர் பேசவில்லை. இந்தியாவின்

மாணவச் செல்வங்களுக்கு அவர் மன்னிப்பு வழங்க தேவையில்லை. அவர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com