கேரள எம்.எல்.ஏ.வின் மகன் விபத்தில் பலி

படுகாயமடைந்த வினீத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள எம்.எல்.ஏ.வின் மகன் விபத்தில் பலி
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் அட்டிங்கல் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்பிகா. இவரது மகன் வினீத் (வயது34). சி.பி.எம். உள்ளூர் கமிட்டி உறுப்பினராக இருக்கும் இவர், எடகோடு கூட்டுறவு சேவை சங்கத்தில் பணியாற்றி வந்தார். வினித் இன்று அதிகாலை தனது நண்பர் அக்ஷய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பள்ளிபுரம் பகுதியில் வந்த போது, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது வர்க்கலாவில் இருந்து வேகமாக வந்த கார் மோதியது. இதில் வினீத் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த வினீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் அக்ஷய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com