உ.பி.யில் நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி: மாயாவதி திட்டவட்டம்

சமாஜ்வாடி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அனைத்து தரப்பினரும் துன்புறுத்தப்பட்டனர். கலவரம் வெடித்தது, குண்டர்கள் ராஜ்யம் நடந்தது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
மாயாவதி
மாயாவதி
Published on

லக்னோ :

உத்தரபிரதேச சட்டசபைக்கு நேற்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சி இன்னும் தனது ஆதரவை தக்கவைத்திருப்பதாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதற்கு நன்றி. ஆனால், தலித் ஓட்டுகளை மட்டுமின்றி, முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர் சாதியினர் என அனைத்து தரப்பினரின் ஓட்டுகளையும் பெற்று வருகிறோம். அதனால், மார்ச் 10-ந் தேதி ஓட்டு எண்ணும்போது பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடித்திருப்பதை பார்ப்பீர்கள். கடந்த 2007-ம் ஆண்டைப்போல், முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.

ஆட்சியை பிடிப்பதாக சமாஜ்வாடி கட்சி காணும் கனவு நொறுங்கி விடும். சமாஜ்வாடி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அனைத்து தரப்பினரும் துன்புறுத்தப்பட்டனர். கலவரம் வெடித்தது, குண்டர்கள் ராஜ்யம் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com