எம்.பி.களை காப்பாற்ற மம்தா டெல்லியில் முகாம்.. கெஜ்ரிவாலுடன் சந்திப்பு

80 எம்எல்ஏக்களில் 58 பேர், கட்சியை விட்டு நீக்கப்பட்ட ரிதாப்ரதா பானர்ஜி தலைமையில் அணிதிரண்டு புதிய பிரிவை உருவாக்கியுள்ளனர்.
எம்.பி.களை காப்பாற்ற மம்தா டெல்லியில் முகாம்.. கெஜ்ரிவாலுடன் சந்திப்பு
Published on

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி டெல்லி சென்றுள்ளார். அங்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று அவர் சந்தித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடையும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கட்சியின் மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 58 பேர், கட்சியை விட்டு நீக்கப்பட்ட ரிதாப்ரதா பானர்ஜி தலைமையில் அணிதிரண்டு புதிய பிரிவை உருவாக்கியுள்ளனர்.

சட்டப்பேரவை போலவே நாடாளுமன்றத்திலும் திரிணாமுல் எம்பிக்களை தங்கள் பக்கம் இழுக்க அதிருப்தியாளர்கள் முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு மக்களவையில் 28 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களும் உள்ளனர்.

எம்பிக்கள் கைநழுவிப் போகாமல் ஒற்றை அணியாக வைத்திருக்க மம்தா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் தனது மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் அதிகாரங்களை பெருமளவில் மம்தா குறைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com