வென்றாலும், தோற்றாலும் கட்சி மக்களுடன் இருக்க வேண்டும்- கார்கே உருக்கம்

சட்டசபை குழு கூட்டத்தை முடிக்கும் வரை அனைத்து வேட்பாளர்களையும் பெங்களூருக்கு வருமாறு கூறியுள்ளோம்.வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன். தோல்வியடைந்தவர்களின் பணியை பாராட்டுவேன்.
வென்றாலும், தோற்றாலும் கட்சி மக்களுடன் இருக்க வேண்டும்- கார்கே உருக்கம்
Published on

காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சட்டசபை குழு கூட்டத்தை முடிக்கும் வரை அனைத்து வேட்பாளர்களையும் பெங்களூருக்கு வருமாறு கூறியுள்ளோம். காங்கிரசின் உழைப்பிற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

முந்தைய அரசு எந்தளவுக்கு திறமையற்றதாக இருந்தது என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. வென்றாலும், தோற்றாலும் கட்சி மக்களுடன் இருக்க வேண்டும்.

எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பற்றி வேட்பாளர்களுக்கு விளக்குவோம். வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன். தோல்வியடைந்தவர்களின் பணியை பாராட்டுவேன்" என்று உருக்கமாக பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com