இளைஞரை அறைந்து கால்சட்டையை துடைக்க சொன்ன பெண் போலீஸ்- அதிர்ச்சி வீடியோ

பெண் போலீஸ் மீது யாராவது புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கால்சட்டையை துடைத்துவிடும் இளைஞர்
கால்சட்டையை துடைத்துவிடும் இளைஞர்
Published on

போபால்:

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், இளைஞர் ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண் போலீஸின் மீது சேறு தெளித்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ், இளைஞரின் கன்னத்தில் அறைந்து தனது கால்சட்டையை துடைத்து விட கூறியுள்ளார். இளைஞர் கால் சட்டையை துடைத்த பின்னும் அவரை மீண்டும் அறைந்துவிட்டு நகர்ந்து சென்றுள்ளார். 

இதனை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். அந்த பெண் போலீஸின் பெயர் சசிகலா என்றும், அவர் ஊர்க்காவல் படையில் கான்ஸ்டபிளாக இருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அவர் மீது யாராவது புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com