குமாரசாமி காங்கிரசுக்கு ஆதரவு தருவார்: சதீஷ் ஜார்கிகோளி பேட்டி

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இல்லை.காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
குமாரசாமி காங்கிரசுக்கு ஆதரவு தருவார்: சதீஷ் ஜார்கிகோளி பேட்டி
Published on

பெலகாவி :

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். குமாரசாமி எங்கள் கட்சிக்கு ஆதரவு தருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகத்தில் கடந்த 2004 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் இரு முறையும் கூட்டணி ஆட்சி பாதியிலேயே கலைந்துபோனது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com