E20 போராட்டம் மூலம் அரசியல் தோல்வியை உயிர்ப்பிக்க முயற்சிக்கும் கெஜ்ரிவால்: பாஜக விமர்சனம்

அரவிந்த் கெஜ்ரிவாலின் பேரணி அபத்தமானது, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது பாஜக பொதுச் செயலாளர் தருண் சுக் விமர்சித்துள்ளார்.
கெஜ்ரிவால்- தருண் சுக்
கெஜ்ரிவால்- தருண் சுக்
Published on

E20 எரிபொருளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக கடுமையாக கடுமையாக சாடியுள்ளது. கெஜ்ரிவால் இந்திய விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

கெஜ்ரிவால் பேரணி

தொடர்பான 2.30 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களைச் சமர்ப்பிப்பதற்காக கெஜ்ரிவால் சுமார் 100 பேருடன் இந்தப் பேரணியை மேற்கொண்டிருந்தார். பிரதமரின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற கெஜ்ரிவால் மற்றும் அவருடன் சென்றவர்களை டெல்லி காவல்துறை ஃபெரோஸ் ஷா சாலையில் தடுத்து நிறுத்தியது.

இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியதாவது:-

அரவிந்த் கெஜ்ரிவாலின் பேரணி அபத்தமானது, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது. அனைத்தும் அறிவியல் பூர்வமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளன. இச்செயல்முறை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யாரும் எந்தப் புகாரையும் எழுப்பவில்லை.

கெஜ்ரிவாலின் பிரசாரம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எதிரானது. கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பறிக்க முயற்சிக்கிறீர்கள். மக்காச்சோளம், கரும்பு மற்றும் பிற விவசாய விளைபொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் பல தசாப்தங்களாக எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதன் பயன்பாடு அறிவியல் பூர்வமான முறையிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்சையை உருவாக்க முயலும் கெஜ்ரிவால்

ஆனால் கெஜ்ரிவால் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கவே விரும்புகிறார். எப்படியாவது அரசியல் செய்யவே அவர் விரும்புகிறார். தேசமோ, வாகனங்களோ அல்லது மக்களின் பிரச்சினைகளோ அவருக்கு முக்கியமல்ல. அவர் தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்கவே முயற்சிக்கிறார். அவரது வாதங்களுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.

இவ்வாறு தருண் சுக் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com