ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் தீ விபத்து: 8 கடைகள் எரிந்து நாசம்

தீ விபத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கும் கடைக்காரர்களுக்கும் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 Jammu Kashmir Fire
Jammu Kashmir Fire
Published on

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள புஃப்லியாஸ் சந்தையில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

அப்பெரும் தீ விபத்தில் எட்டு கடைகளும் அதனுள் இருந்த அனைத்து பொருள்களும் முழுவதுமாக எரிந்து சாம்பலாகின.

இந்நிலையில் உள்ளூர் மக்கள் முதற்கட்டமாக வாளி மூலம் தண்ணீர் இறைத்து தீயை அணைக்க முற்பட்டனர்.

பின்னர் ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உதவியுடன் தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

30 நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், அருகிலுள்ள கட்டிடங்களுக்கும், வீடுகளுக்கும் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது.

இந்நிலையில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட கடைகளுக்குள் இருந்த சொத்துக்கள் அனைத்தும் முழுவதுமாக எரிந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . குறிப்பாக மரம் மற்றும் தகரத்தால் ஆன ஒரு கடை வரிசை முழுவதும் எரிந்து நாசமானது.

மேலும் கடைகளில் ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீயணைப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் தீ வேகமாகப் பரவி மற்ற கடைகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகப் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களும், குடியிருப்பாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், அவசரகால உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கு ஒரு நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தீவிபத்து, பல குடும்பங்களின் பிரதான வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இந்நிலையில் தீ விபத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கும், கடைக்காரர்களுக்கும் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com