சந்திரயான்-3 திட்ட வெற்றி: இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்து நாட்டின் உயரிய பரிசு

இஸ்ரோ விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கி, அதில் இருந்து பிரக்யான் என்ற ரோவரை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கி பல்வேறு ஆய்வுகளை செய்தது. இஸ்ரோ சார்பில், ஐஸ்லாந்த் நாட்டுக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பரிசை பெற்றார்.
சந்திரயான்-3 திட்ட வெற்றி: இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்து நாட்டின் உயரிய பரிசு
Published on

சென்னை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவ ஆய்வுக்காக அனுப்பிய சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றது. இஸ்ரோ விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கி, அதில் இருந்து பிரக்யான் என்ற ரோவரை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கி பல்வேறு ஆய்வுகளை செய்தது.

இதைத்தொடர்ந்து ஐஸ்லாந்து நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு '2023- லீப் எரிக்சன் லூனார்' என்ற உயரிய பரிசை வழங்கியது. இதனை இஸ்ரோ சார்பில், ஐஸ்லாந்த் நாட்டுக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பரிசை பெற்றார். இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், இதற்கு நன்றி தெரிவித்து காணொளி செய்தியை அனுப்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com