ரெயிலில் மேல் படுக்கை கீழே விழுந்ததால் படுகாயமடைந்த நபர் சிகிக்சை பலனின்றி உயிரிழப்பு

கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அமைச்சரை கேரளா காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ரெயிலில் மேல் படுக்கை கீழே விழுந்ததால் படுகாயமடைந்த நபர் சிகிக்சை பலனின்றி உயிரிழப்பு
Published on

எர்ணாகுளம் - நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்த கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் நடு படுக்கை உடைந்து விழவில்லை, மற்றொரு பயணி சரியாக சங்கிலி மாட்டாமல் சென்றதால், நடுப் படுக்கை வேகமாக மோதியதில் கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,

ரெயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் உள்ளது.

என்று பதிவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com