நான்கு முறை திருமணம் செய்யும் ஊடுருவல்காரர்கள்.. அசாமில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் - அமித் ஷா

பழங்குடிப் பெண்களைத் திருமணம் செய்து அரசியல் செல்வாக்கு பெற ஊடுருவல்காரர்கள் முயற்சிக்கின்றனர்.
நான்கு முறை திருமணம் செய்யும் ஊடுருவல்காரர்கள்.. அசாமில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் - அமித் ஷா
Published on

அசாமில் கோல்பாரா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, "பிரதமர் நரேந்திர மோடியும், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் பழங்குடியினரின் வளர்ச்சிக்கான ஒரு செயல்திட்டத்தை வகுத்துள்ளனர்.

மோடியின் தலைமையில், ஒரு பழங்குடிப் பெண் நாட்டின் முதல் குடிமகளாக ஆகியுள்ளார்.

பழங்குடிப் பகுதிகளில் பொது சிவில் சட்டம் திணிக்கப்படுவதாக காங்கிரஸ் விமர்சிப்பது முரண்பாடானது. பழங்குடிப் பெண்களைத் திருமணம் செய்து அரசியல் செல்வாக்கு பெற ஊடுருவல்காரர்கள் முயற்சிக்கின்றனர்.

பொது சிவில் சட்டம் மூலம் ஊடுருவல்காரர்கள் நான்கு முறை திருமணம் செய்துகொள்வதைத் தடுக்க முடியும்.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அசாமில் பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படும். சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். அசாமில் மேலும் ஐந்து ஆண்டுகள் எங்களுக்கு வாய்ப்பு அளிக்குக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com