டிரம்பை சந்திக்கும் மோடி.. 3 இந்திய மாலுமிகளை அமெரிக்கா கொன்றது குறித்து வாய் திறக்காதது ஏன்? என ராகுல் கேள்வி

சுயநலத்திற்காக நாட்டை அடகு வைத்த பிரதமர்.
ராகுல், மோடி, டிரம்ப்
ராகுல், மோடி, டிரம்ப்
Published on

ஓமன் வளைகுடாவில் கடந்த புதன்கிழமை பயணித்த எம்.டி செட்டபெல்லோ என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

3 இந்திய மாலுமிகள்

இந்தக் கப்பலில் பயணித்த 24 இந்திய ஊழியர்களில் 21 பேர் ஓமன் அதிகாரிகளால் மீட்கப்பட்ட நிலையில், மாயமாகியிருந்த 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

ஜி7

இந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனிடையே வரும் ஜூன் 17 அன்று பிரான்சில் ஜி7 மாநாட்டில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது நாட்டின் இறையாண்மைக்கு இழைக்கப்படும் துரோகம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மிரட்டல் தொனி

"அமெரிக்காவின் கொடூர தாக்குதலால் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டு பல நாட்கள் கடந்தும், அமெரிக்கா தரப்பில் இருந்து எந்தவொரு வருத்தமோ அல்லது மன்னிப்போ தெரிவிக்கப்படவில்லை.

மாறாக, அவர்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு மிரட்டல் தொனியிலான கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாயே திறக்காமல்

அமெரிக்காவின் இந்த அதிகாரப் போக்கிற்குப் பிரதமர் மோடி உரியப் பதிலடி கொடுக்கவில்லை.

ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு தன் நாட்டு மக்களை கொன்ற பிறகும் அந்நிய நாட்டின் இத்தகைய மிரட்டல் மொழியை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது.

ஆனால், நமது நாட்டு நலனை சமரசம் செய்துள்ள பிரதமர் என்ன செய்கிறார்? வாயே திறக்காமல் மௌனமாக இருக்கிறார்.

அமெரிக்கா போடும் உத்தரவுகளை ஒரு விசுவாசமான வேலைக்காரனைப் போலக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறார்.

சுயநலத்திற்காக நாட்டை அடகு வைத்துள்ள பிரதமரால் இந்தியத் தாயின் மைந்தர்களையோ, நாட்டின் சுயமரியாதையையோ ஒருபோதும் பாதுகாக்க முடியாது." என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com