2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்தியா GDP

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு.வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியா.
2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்தியா GDP
Published on

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சரிந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களில், நடப்பு நிதியாண்டு அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதம் குறைந்துள்ளது.

முன்னதாக 2022-23 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.3 சதவீதமாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாத இருந்தது. இந்த ஆண்டு உற்பத்தி வெகுவாக குறைந்த காரணத்தால் வளர்ச்சியும் குறைந்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவை சந்தித்த போதிலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com