வெங்காய ஏற்றுமதி... தடை விதித்த மத்திய அரசு

தற்போது பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெங்காய ஏற்றுமதி... தடை விதித்த மத்திய அரசு
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காய விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com