உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: குடும்ப தகராறில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்

வலியால் அலறி துடித்த பானா அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: குடும்ப தகராறில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்
Published on

உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்ஹத் கிராமத்தை சேர்ந்தவர் பூல் கான். இவரது மனைவி பானா. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பூல்கானுக்கும் பானாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபம் தலைக்கேறிய பூல்கான் மனைவி பானாவின் மூக்கு மற்றும் கன்னத்தில் வெறிகொண்டு கடித்தார். இதில் அவரது மூக்கில் இருந்து சதை பிய்ந்து ரத்தம் வெளியேறியது. மேலும் கன்னங்களிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. வலியால் அலறி துடித்த பானா அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரது முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளித்து 10 தையல் போட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் ஜான்சியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். அவரது மூக்கில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவரது முகத்தோற்றத்தை சரிசெய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து பானாவின் சகோதரர் அமருதீன் பூல்கான் மீது போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், பூல்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடினர்.

போலீசார் தேடுவதை அறிந்த பூல்கான் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதத்தின் போது மனைவியின் மூக்கை கணவர் கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com