உ.பி.யில் சினிமா பட பாணியில் பணத்தை சாலையில் வீசி தப்பிக்க முயன்ற போதைப்பொருள் கடத்தல் கும்பல்

49 லட்சம் ரூபாய் மதிப்பலான போதைப்பொருட்களை கடத்தி சென்ற கும்பல், போலீசாரிடம் இருந்து தப்பிக்க நூதன வழியை மேற்கொண்டனர்.
உ.பி.யில் சினிமா பட பாணியில் பணத்தை சாலையில் வீசி தப்பிக்க முயன்ற போதைப்பொருள் கடத்தல் கும்பல்
Published on

உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று, ஹோண்டா சிட்டி காரில் சென்று கொண்டிருந்தது. சிக்னலில் நிற்காமல் வேகமாக சென்றதால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த காரை போலீசார் பின் தொடர்ந்தனர். ஆனால், சினமா காட்சியை போல் போலீசார் வாகனத்தை இடித்து இடித்து சென்றனர். இதில் போலீசார் வாகனம் ரிப்பேர் ஆனது. உடனே, அருகில் உள்ள உள்ளூர்வாசி தனது காரை வழங்கினார். அந்த காரில் போலீசார் சேஸிங் செய்தனர்.

அப்போது தங்களிடம் இருந்த 100 ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசினார். மக்கள் பணத்தை எடுக்க முண்டியடிப்பார்கள். இதனால் போலீசார் தங்களை பின்தொடர முடியாத நிலை ஏற்படும் என்று நினைத்தனர். ஆனால், போலீசார் தொடர்ந்து அவர்களை சேஸிங் செய்து அந்த கும்பலை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே போலீசார் மீது அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதற்கு போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதால் ஒருவர் காயம் அடைந்தனர். இந்த கும்பல் ஜார்க்கண்டில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு போதைப்பொருளை கடத்தி சென்றுள்ளது. இது போன்று பலமுறை கடத்தி சென்றுள்ளனர். தற்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com