டெல்லியில் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லிக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
டெல்லியில் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

அதேபோல் நொய்டா பகுதியிலும் கனமழை பெய்தது. இதற்கிடையே டெல்லிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

மேலும் அரியானா பஞ்சாப் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com