கனமழையால் இடிந்து விழுந்த மேற்கூரை - கவுகாத்தி விமான நிலையத்தில் பரபரப்பு

அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விபத்து காரணமாக கவுகாத்தி விமான நிலையத்தில் சேவை பாதிப்பு.
கனமழையால் இடிந்து விழுந்த மேற்கூரை - கவுகாத்தி விமான நிலையத்தில் பரபரப்பு
Published on

அசாம் மாநிலத்தில் திடீர் கனமழை மற்றும் சூரை காற்று காரணமாக கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது. கனமழை, விமான மேற்கூரை இடிந்து விழுந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

மேலும் விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதியுற்றனர். கனமழை காரணமாக விமான நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

X

Maalai Malar
www.maalaimalar.com