LIC-யின் 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு

எல்.ஐ.சி.யின் 6.5 சதவீத பங்குகளை ஒரு பங்கு 382 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்ய எல்.ஐ.சி. முடிவு செய்துள்ளது.
LIC
எல்.ஐ.சி.
Published on

இந்தியாவின் மிகப்பெரிய பொது நிறுவனங்களில் ஒன்று லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா (LIC). இந்த நிறுவனத்தின் மார்க்கெட் மூலதனத்தின் மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் ஆகும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் 96.50 சதவீதம் பங்குகளை இந்திய அரசு வைத்துள்ளது.

பொதுமக்களிடம் 2.06 சதவீதம் பங்கு

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.44 சதவீதம் பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.99 சதவீதம் பங்குகளையும், பொதுமக்கள் 2.06 பங்குகளையும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதிதிரட்டும் வகையில் 1.5 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

ஒரு பங்கின் விலை 382 ரூபாய்

இந்த நிலையில் 6.5 சதவீதம் வரை பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பங்கின் விலையை 382 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இரண்டு நாட்கள் என்ற அடிப்படையில் பங்குகளை விற்பனை செய்கிறது.

மார்க்கெட் மூலதனத்தின் மதிப்பு அடிப்படையில் 1 சதவீதம் என்றாலே 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். 6.5 சதவீதம் என்றால் சுமார் 40 கோடி ரூபாய் ஆகும்.

இன்றைய நிலவரப்படி எல்.ஐ.சி.யின் ஒரு பங்கு 424.40 ரூபாயாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com