தெலுங்கானாவில் பஸ்சில் 4 கிலோ தங்க நகை திருட்டு

ஆஷிஷ் நகைப்பையை பஸ்சில் வைத்து விட்டு உணவு சாப்பிட சென்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப் படைகள் அமைத்து நகைகளை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.
கோப்புப்படம்
Published on

திருப்பதி:

மும்பையை சேர்ந்தவர் ஆஷிஷ். இவர் அங்குள்ள நகைக்கடை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

அடிக்கடி ஐதராபாத், சங்க ரெட்டி வந்து நகை தயாரிப்பாளர்களிடம் இருந்து நகைகளை வாங்கி செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் ஐதராபாத் வந்த ஆஷிஷ் நகை தயாரிப்பாளர்களிடம் இருந்து 4 கிலோ நகைகளை வாங்கினார்.

பின்னர் ஐதராபாத்தில் இருந்து மும்பை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த பஸ் சிராக் பள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மும்பை ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் உணவு சாப்பிடுவதற்காக தாபாவில் நிறுத்தப்பட்டது.

ஆஷிஷ் நகைப்பையை பஸ்சில் வைத்து விட்டு உணவு சாப்பிட சென்றார். அப்போது 4 கிலோ தங்க நகையை திருடி சென்று விட்டனர். ஆஷிஷ் திரும்பி வந்து பார்த்தபோது நகை பையை காணவில்லை.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சிராக் பள்ளி போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப் படைகள் அமைத்து நகைகளை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com