பீகாரில் Khan Sir பயிற்சி மையத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு..!

தொழில் போட்டி பொறாமையால் பயிற்சி மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, கான் சார் குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் Khan Sir பயிற்சி மையத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு..!
Published on

பீகாரில் உள்ள பிரபலமான கான் சார் (Khan Sir) பயிற்சி மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மையம் தகர்க்கப்படும் என மிரட்டல் வந்ததாக மையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மையத்திற்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

பிரபல யூடியூபர் கான் சார் (Khan Sir) இந்த மையத்தை நடத்தி வருகிறார். கான் சார், தனது மையத்திற்கு அருகில் உள்ள பயிற்சி மையங்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் தன்னுடைய மையத்தை தகர்த்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர் எனக் கூறியுள்ளார்.

எனினும், எனினும், விசாரணை நடைபெற்று வருவதாகவும், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் தனக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு வீரர் ஒருவர் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், என்னுடைய பயிற்சி மையம் குறைந்த கட்டணம் பெற்று கொண்டு, இன்னும் சிறந்த ரிசல்ட்-ஐ கொடுப்பதால், சிலருக்கு இது ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏழைகளுக்கும் கல்வி பெறும் உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, பாதுகாப்பு சார்ந்ததை கருத்தில் கொள்ளுமாறு நிர்வாகத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். ஆயிரக்கணக்கில் முடிவுகள் எட்டப்படும்போது, ​​சில சமூக விரோத சக்திகள் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக உணர்கின்றன. எங்களை ஒடுக்கிவிட முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com