கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய மதுக்கடைகளுக்கு அபராதம்

டெல்லியில் 2 மதுக்கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மதுபானங்களை வாங்க குவிந்த மக்கள்
டெல்லியில் மதுபானங்களை வாங்க குவிந்த மக்கள்
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில்களில் பயணிகள் 50 சதவிதம் பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மத வழிபாட்டுத் தளங்ள் மூடப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியின் வடகிழக்கு பகுதி மாவட்டமான சீலத்தில் உள்ள 2 மதுக்கடைகளில் நேற்று அதிக கூட்டம் காணப்பட்டது. அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட எந்த வித நெறிமுறைகளை பின்பற்றாமல் மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

இதையடுத்து, அங்கு வந்த டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத காரணங்களுக்காக அந்த

2 மதுபான கடைகளின் உரிமையாளர்களுக்கு  ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதனிடையே, புனே நகரில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மீறும் வர்த்தக நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துளளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com