ஜெகதீஷ் ஷெட்டர் 100 சதவீதம் வெற்றி பெறுவார் என ரத்தத்தில் எழுதிய ரசிகர்

உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம் தேதி நடக்கிறது.
ஜெகதீஷ் ஷெட்டர் 100 சதவீதம் வெற்றி பெறுவார் என ரத்தத்தில் எழுதிய ரசிகர்
Published on

உப்பள்ளி

பா.ஜனதா மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா சார்பில் தனக்கு டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை வீழ்த்த பா.ஜனதா தலைவர்கள் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் துரோகி என்றும், எனது ரத்தத்தில் எழுதுகிறேன் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைவார் என்றும் கூறியிருந்தார். இது பெரும் விவாதப்பொருளாகி வருகிறது.

இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டரான மஞ்சுநாத் என்.யந்துருவி, ஜெகதீஷ் ஷெட்டர் மீதான அபிமானத்தில் ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் வெற்றி பெறுவார் என ரத்தத்தில் எழுகிறேன். இந்த முறை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும். ஜெய் காங்கிரஸ் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com