“கங்கனா ரனாவத்தை பாஜகவே ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை... பின்னர் நாங்கள் மட்டும் ஏன்? - சிஜேபி பதிலடி!

'ஜென் சி' அல்லது 'ஜென் ஆல்ஃபா' தலைமுறை இளைஞர்கள் யாரும் கங்கனாவை ஒரு தீவிரமான அரசியல்வாதியாகப் பார்ப்பதோ அல்லது அவரது கருத்துக்களைக் கேட்பதோ இல்லை.
“கங்கனா ரனாவத்தை பாஜகவே ஒரு பொருட்டாக எடுத்துக்
கொள்வதில்லை... பின்னர் நாங்கள் மட்டும் ஏன்? - சிஜேபி பதிலடி!
Published on

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தின் கருத்துக்களை அவரது சொந்தக் கட்சியினரே ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத போது, நாங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அவரை சாடியுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சாக்கடை என்றும், மேலும் பெண்களை இன்னும் மோசமாகவும் கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் சிஜேபியின் தலைமை செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

“அவருடைய சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே கங்கனா ரனாவத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அல்லது அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அப்படியிருக்க நாம் ஏன் கொடுக்க வேண்டும்?” என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய 'ஜென் சி' (Gen Z) அல்லது 'ஜென் ஆல்ஃபா' (Gen Alpha) தலைமுறை இளைஞர்கள் யாரும் கங்கனாவை ஒரு தீவிரமான அரசியல்வாதியாகப் பார்ப்பதோ அல்லது அவரது கருத்துக்களைக் கேட்பதோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, கங்கனா தனது மண்டி தொகுதிக்குச் சென்றபோது, எம்பி பதவிக்கு இவ்வளவு வேலை இருக்கும் என்று தான் நினைக்கவில்லை எனக் கூறிய வீடியோவைச் சுட்டிக்காட்டிய சௌரவ் தாஸ், இதுவே அவரது பொதுப்பணியின் மீதான அலட்சியத்தைக் காட்டுகிறது எனவும் விமர்சித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com