ரிசார்ட்டுக்கு வரவழைத்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

கைது செய்யப்பட்ட முர்ஷித் முகம்மதை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.இதுபோன்று எத்தனை சிறுமிகளை சீரழத்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிசார்ட்டுக்கு வரவழைத்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் முர்ஷித் முகம்மது(வயது24). தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் மீது மலப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

அவர்கள் தங்களது புகாரில், பஸ்சில் சென்ற தங்களின் மகளுடன் முர்ஷித் முகம்மது நட்பாக பழகி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை யாரிடமும் கூறக்கூடாது என்று மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். முர்ஷித் முகம்மது டிரைவராக வேலைபார்த்த பஸ்சில் மாணவி சென்று வந்திருக்கிறார். அப்போது அவரிடம் நட்பாக பழகியிருக்கிறார். அதனடிப்படையில் அந்த மாணவியும் அவருடன் பேசி வந்துள்ளாளர்.

இதையடுத்து அந்த மாணவியை வயநாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் அதனை வெளியில் கூறக்கூடாது என்று மாணவியை மிரட்டியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் முரஷித் முகம்மது மீது போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த அவரை ரகசியமாக தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார், அவர் இருந்த ரிசார்ட்டுக்கு அதிரடியாக சென்று கைது செய்தனர்.

அப்போது அவர் மற்றொரு மைனர் பெண்ணுடன் இருந்தார். அந்த பெண்ணும் பஸ்சில் பயணம் செய்தபோது ஏற்பட்ட பழக்கத்தில், டிரைவர் அழைத்தபடி ரிசார்ட்டுக்கு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அந்த மைனர் பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி, அவர்களது குடும்பத்தினருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட முர்ஷித் முகம்மதை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பல சிறுமிகளை அதேபோன்று சீரழித்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

தனது பஸ்சில் பயணிக்கக்கூடிய மைனர் சிறுமிகளிடம் நட்பாக பழகுவது போல் பேசி, ரிசார்ட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். தனது செயல் யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாத வகையில் பழகி, சிறுமிகளை ரிசார்ட்டுக்கு காலையில் அழைத்துச் சென்று, பின்னர் மாலையில் மீண்டும் சிறுமிகளை திரும்பி விட்டுவிடுவாராம்.

அவர் இதுபோன்று எத்தனை சிறுமிகளை சீரழித்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com