

கர்நாடக மாநிலத்தில் 2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. முதல் மந்திரியாக இருந்த சித்தராமையா தனது பதவியை கடந்த 28-ம் தேதி ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக் கொண்டார். புதிய முதல்வர் முறைப்படி பதவியேற்கும் வரை அவரை தற்காலிக முதல் மந்திரியாக நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, துணை முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல் மந்திரியாக பரமேஸ்வரா பதவியேற்றார்.
இந்தப் பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள லோக்பவனில் நடந்தது. டி.கே.சிவக்குமாருடன் 14 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அமைப்பு செயலாளர் வேணுகோபால், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.