கடும் பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் 30க்கும் மேற்பட்ட விமானங்கள், ரெயில்கள் தாமதம்

டெல்லியில் பனிமூட்டத்துடன் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.பனிமூட்டம் காரணமாக 30க்கும் மேற்பட்ட ரெயில்கள், விமானங்கள் தாமதமாகின.
கடும் பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் 30க்கும் மேற்பட்ட விமானங்கள், ரெயில்கள் தாமதம்
Published on

புதுடெல்லி:

வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. தலைநகர் டெல்லியில் காலை வேளையில் வெப்ப நிலை 3.6 டிகிரி செல்சியசுக்கும் கீழ் செல்வதால் கடுமையான குளிர் காணப்படுகிறது.

இதற்கிடையே, கடுமையான பனி மற்றும் குளிர் காரணமாக வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

தலைநகர் டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவும், குளிர் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 30க்கும் மேற்பட்ட ரெயில்கள் மற்றும் விமானங்களின் வருகை, புறப்பாடுகளில் தாமதம் ஏற்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com