டெல்லி: ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டரில் புகுந்த மழை நீர்.. 3 பேர் பலி.. மாணவர்கள் போராட்டம்

நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.நேற்று நாளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னாள் கூடி மாணவர்கள் மாநகராட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்
டெல்லி: ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டரில் புகுந்த மழை நீர்..  3 பேர் பலி.. மாணவர்கள் போராட்டம்
Published on

தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு [RAU] ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்துவந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர்பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 2 மாணவிகளும் ஒரு மாணவரும் உயிரிழந்தனர்.

இதனால் கொந்தளிப்பில் நேற்று நாளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னாள் கூடி மாணவர்கள் மாநகராட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை அப்புறப்படுத்தாலேயே கட்டடத்துக்குள் நீர் புகுந்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக டெல்லியில் அதிகளவில் செயல்பட்டு வரும் பயிற்சி மையங்களில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் பலர் அங்கு தங்கி படித்து  வருகின்றனர். கடந்த ஜூலை ௨௨ ஆம் தேதி டெல்லியில் மற்றொரு கோச்சிங் சென்டரில் படித்து வந்த மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com