நுபுர் சர்மாவை 4 நாட்களாக காணவில்லை- மும்பை போலீசார் தகவல்

நுபுர் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் டெல்லி வந்தனர்.கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை என்றும், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை கண்டறிய முடியவில்லை என்றும் மும்பை போலீசார் தெரிவித்தனர்.
நுபுர் சர்மாவை 4 நாட்களாக காணவில்லை- மும்பை போலீசார் தகவல்
Published on

நபிகள் நாயகம் குறித்து சரச்சையான கருத்துக்களை தெரிவித்த பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வழக்கு பதிவாகி இருந்தது. விசாரணைக்காக மும்பை பைகோர்னி போலீசார் நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் நுபுர் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் டெல்லி வந்தனர். ஆனால் கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை என்றும், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை கண்டறிய முடியவில்லை என்றும் மும்பை போலீசார் தெரிவித்தனர்.

டெல்லி போலீசார் இந்த விஷயத்தில் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com