

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.
இப்போராட்டம் நேற்று தீவிரமடைந்த நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார், ராணுவப் படையினர் தடியடி நடத்தினர். இதில் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீதான காவல்துறையின் அப்பட்டமான அத்துமீறலுக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாகவும் செல்ல முற்பட்டவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனே கார்கே, வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.