ஃபெஞ்சல் புயல்: உயிரிழந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவிப்பு

அண்ணாமலையின் உயிரிழப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
ஃபெஞ்சல் புயல்: உயிரிழந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவிப்பு
Published on

ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் உயிரிழந்த மின்சார வாரிய ஊழியர் அண்ணாமலையின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரண நிதி மற்றும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு மின்சார வாரியத்தில் பணி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 01.12.2024 இரவு ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்டம்பள்ளம் மின்மாற்றியில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்யும் பணிக்காக வெறையூர் பிரிவிலிருந்து சென்ற மின்பாதை ஆய்வாளர் பாலசுந்தர் (வலது 56) மற்றும் கம்மியர் அண்ணாமலை (வயது 56) ஆகிய இருவரில் அண்ணாமலை அவர்கள் பவித்திரம் தரைப்பாலத்தைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக வெள்ளநீரில் அடித்துச் செல்வப்பட்டு காணாமல் போனதைத் தொடர்ந்து அவரைத் தேடியதில் நேற்று (03.12.2024) பிற்பகல் 03.00 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிருந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மின்சார வாரிய ஊழியர் அண்ணாமலையின் உயிரிழப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அண்ணாமலையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கிடவும், உயிரிழந்த அண்ணாமலை அவர்களின் குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com